×

முதுகுளத்தூர் அருகே போதை வஸ்துகள் இல்லாத முன்மாதிரி கிராமம்

ராமநாதபுரம், ஏப்.29: முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம் மற்றும் நூறு நாள் வேலை உள்ளிட்ட கூலி வேலைகளை செய்து வருகின்றனர். கிராமத்தில் திருமணம் போன்ற வீட்டு விஷேசங்கள், கோயில் திருவிழா போன்ற பண்டிகை காலங்களில் மது உள்ளிட்ட போதை வஸ்துகளால் பிரச்னை ஏதும் ஏற்பட்டு, கிராமமக்களின் ஒற்றுமை சீர் குலைந்து விடக்கூடாது என்பதற்காக கிராமத்திற்குள் மது அருந்த தடை விதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அனைத்து சமுதாய மக்களின் பெரியோர்களை அழைத்து பொதுக்கூட்டம் போட்டு முடிவு செய்யப்பட்டது. அதில் உள்ளூர் மற்றும் வெளியூர்காரர்கள் யாராக இருந்தாலும் கிராமத்திலுள்ள பொது இடங்களில் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் தீர்மானம் இயற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து போதை வஸ்துகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையில் எழுதி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. முன்மாதிரியாக திகழும் மீசல் கிராம மக்களை அரசு அதிகாரிகள், சுற்று வட்டார கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post முதுகுளத்தூர் அருகே போதை வஸ்துகள் இல்லாத முன்மாதிரி கிராமம் appeared first on Dinakaran.

Tags : Mudukulathur ,Ramanathapuram ,Meisal village ,Mudugulathur ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...